Commencement of Indian Democratic Festival – Tamil

*இந்திய ஜனநாயக திருவிழா ஆரம்பம்: ஒவ்வொரு இந்தியனும் பெருமை பெறும் தருணம்:*
🙏Ramu🙏19/4/2024

இந்த 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்தியாவும் ஒருங்கிணைந்து ஜாதி, மதம், ஆண், பெண், பணக்காரன், ஏழை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல்…

*ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரே மதிப்பு* என்ற சம நோக்குடன்,..

தேர்தல் நாளன்று ஒவ்வொருவருக்கும் சம அந்தஸ்து மற்றும் சம முக்கியத்துவத்துடன், ஒவ்வொருவரும் வரிசையில் நின்று கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிகழ்கால கடமையை நிறைவேற்றும் பாக்கியம் உலகில் எத்தனை நாட்டு மக்களுக்கு வாய்க்கும் என்று எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் தருணம் இது.

மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு யாதெனில் வருங்காலம் தமக்கும் தம் சந்ததிகளுக்கும் மகிழ்ச்சிகரமாக அமையவேண்டி நிகழ்கால இன்பங்களை உடனே அனுபவிக்கமல் கொஞ்சம் தள்ளிப்போடும் குணம் (delaying the gratification).

இந்த வேகாத வெயிலில்  பல முதியோர்கள் தள்ளாடியபடியும் , சக்கர நாற்காலியிலும், முட்டி வலி தாளாமல் பிறர் உதவியுடனும், எவ்வளவோ இன்பங்களுக்கு நடுவில் இளைஞர்களும், இளைங்கிகளும் வரிசையாக ஒட்டு போடுவதற்காக நிற்பதை பார்க்கும்போது…
*… இந்திய மக்களின் சகிப்புதன்மை, ஜனநாயகத்தின் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் போராட்டகுணம் போன்றவை பல (வடகொரியா, பாக்கிஸ்தான்,…) நாடுகளுக்கு முன்மாதிரி.*

ஜூன் மாதம் யார் ஆட்சி அமைத்தாலும், ஆட்சியாளர்கள் மேற்கூறிய இந்திய மக்களின் நற்குணத்தை வழக்கம்போல் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளமல்,…

….அவர்கள் களத்தில் இறங்கினால் *”சாது மிரண்டால் காடு கொள்ளாது”* என்பதை எச்சரிக்கை மணியாக உணர்ந்து அவர்கள் வருங்காலம் இன்பமயமாக அமைய,
… ஆட்சியாளர்கள் அடிப்படை ஜனநாயகமான…

*”மக்களுக்கான ஆட்சியை தருவதற்காக, மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறோம்”*

…. என்பதை புரிந்துகொண்டு நல்லாட்சி தரவேண்டும் என்று புதிய ஆட்சியாளர்களை வாழ்த்துகிறேன்.

*வருங்காலம்  நமது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்,*
🙏ராமு🙏

Leave a comment